குளித்தலை பகவதியம்மன் கோவில் திருவிழா: அலகு குத்தி ஊர்வலம்
ADDED :2395 days ago
குளித்தலை: பகவதியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் அலகு குத்தி, அக்னிசட்டி ஏந்தி, நேர்த்திக் கடன் செலுத்தினர்.
குளித்தலை அடுத்த, குமாரமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள பகவதியம்மன்கோவில் திருவிழா கடந்த, 5ல், முகூர்த்த கால் ஊன்றுதலுடன் துவங்கியது. 7 இரவு கரகம் பாலித்தல்,
தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் (ஏப்., 8ல்)மதியம், பால் குடம், தீர்த்த குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
அப்போது, அலகு குத்தி, அக்னிச்சட்டி ஏந்தி வந்து பலர் நேர்த்திக் கடன் செலுத்தினர். ஊர்வலம் பிரதான வீதிகள் வழியாக சென்று, கோவில் வந்தடைந்தது. நேற்று (ஏப்., 9ல்) எருமை கிடாய் வெட்டுதல், இரவு மாவிளக்கு ஊர்வலம் மற்றும் வானவேடிக்கை விமரிசையாக நடந்தன. இன்று (ஏப்., 10ல்) மஞ்சள் நீராட்டத்துடன் திருவிழா முடிவடைகிறது.