உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி

அருணாசலேஸ்வரர் கோவிலில் பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ இரண்டாம் நாள் விழாவில், அண்ணாமலையாருக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவம் பந்தக்கால் முகூர்த்தத்துடன் 9ம்தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் இரண்டாம் நாளில் மகிழ மரம் அருகே உண்ணாமலையம்மன் சமேதராய் அருள்பாலித்த அண்ணாமலையாருக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !