விஸ்வேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
ADDED :2481 days ago
திருப்பூர்:திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலின் மூன்றாமாண்டு விழா இன்று நடைபெறவுள்ளது.
திருப்பூர் விசாலாட்சி அம்மன் உடனமர் விஸ்வேஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேக மூன்றாமாண்டு விழா நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து 1,008 சங்கு பூஜை, 108 வலம்புரி சங்கு பூஜை மற்றும் 108 கலச பூஜை ஆகியன நடந்தன. அதன்பின், முதற்கால யாக பூஜை துவங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை, 6:30 மணிக்கு விக்னேஸ்வரா பூஜை, இரண்டாம் கால யாக பூஜை ஆகியன நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு மகா தீபாராதனையுடன் சிறப்பு பூஜை நடைபெறவுள்ளது.