மதுரை திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :2405 days ago
திருநகர்:மதுரை திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. உற்ஸவர் சித்தி விநாயகர் முன் யாகம் வளர்க்கப்பட்டு அனுக்ஞை, மகா கணபதி ஹோமம், பூஜைகள் நடந்தன. உற்ஸவர், மூலவருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது.