உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கே.வைரவன்பட்டி அய்யனார் கோயிலில் புரவியெடுப்பு விழா

கே.வைரவன்பட்டி அய்யனார் கோயிலில் புரவியெடுப்பு விழா

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே கே.வைரவன்பட்டியில் மகிழம்பூ அய்யனார் கோயிலுக்கு 12 ஆண்டுகளுக்குப் பின் புரவி எடுப்பு விழா நடைபெறுகிறது.

இந்த கிராமத்திலுள்ள ஸ்ரீமகிழம்பூ அய்யனார் கோயிலில் முன்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புரவி எடுப்பு நடந்தது.

பின்னர் நடைபெறாமல் இருந்த புரவி எடுப்பு 12 ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது. கடந்த ஏப்.5ல் காப்புக்கட்டி விழா துவங்கியது. தொடர்ந்து சாமியாட்டம், முளைப்பாரி எடுத்து அய்யனாரை வழிபட்டனர். இன்று (ஏப்., 12ல்) மாலை புரவிகள் பொட்டலுக்கு எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள்,. தீபாராதனைகள் நடைபெறும். நாளை (ஏப்., 13ல்) மாலை பொட்டலிலிருந்து புரவிகள் அய்யனார் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.

பின்னர் சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். நீண்ட நாட்களுக்கு பின் நடைபெறும் விழா என்பதால் கிராமத்தினர் சுற்று வட்டாரக் கிராமத்தினர்களை விருந்துக்கு உற்சாகமாக
அழைத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !