நத்தம் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி பூஜை
ADDED :2731 days ago
நத்தம்:நத்தம் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
சுவாமிக்கு பால், இளநீர், பன்னீர், மஞ்சள்நீர், சந்தனம், விபூதி, புஷ்பம், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.