காளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா
ADDED :2399 days ago
தேவதானப்பட்டி: சில்வார்பட்டியில் வேளாளர் உறவின்முறைக்கு சொந்தமான காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா நடந்தது. சிறு குளம் கண்மாய்க்கு சென்று அம்மன் கரகம் அலங்காரம் செய்து கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. பெண்கள் மாவிளக்கு எடுத்தனர். பொங்கல் வைத்து கிடா வெட்டினர். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை தலைவர் பாலசுப்பிரமணி, செயலர் மணியரசன், பொருளாளர் முத்துராமலிங்கம் செய்தனர்.