உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னமனுார் சிவகாமியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா

சின்னமனுார் சிவகாமியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா

சின்னமனுார்: சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா, ஏப்., 11ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. சின்னமனுார்  நாட்டாண்மைக்காரர் வகையறா சார்பில் மூன்றாம் நாள் மண்டகப்படி நேற்று நடந்தது. ஏகசப்பரத்தில் சுவாமி, அம்பாள் நகர்வலம் நடந்தது. சின்னவாய்க்கால் கரையில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் நல்லையம் பெருமாள் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை டிரஸ்டி நாகராஜன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !