துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3)
தமிழ் புத்தாண்டு (விகாரி வருடம்) ஏப்ரல் 14ம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் நட்சத்திரத்திற்கான பலன் ..
சித்திரை3,4ம் பாதம்: கொடுக்கல், வாங்கலில் கவனமுடன் இருக்கவும். தந்தையின் உடல்நிலை மேம்படும். நண்பரால் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் பரபரப்பாக உழைக்க வேண்டிவரும். அதற்கான பரிசு, பாராட்டு கிடைக்கும். 2019 அக்டோபருக்குப் பின் உடல்நலனில் அக்கறை தேவை. விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அரசுவகையில் நன்மை உண்டு. கடன் தொல்லை குறையும்.
சுவாதி: சோம்பலை கைவிட்டு சுறுசுறுப்புடன் செயல்படவும். கேளிக்கை மற்றும் உற்சாகத்தில் கவனம் செலுத்தாதீர்கள். படிப்பிலும், பணியிலும் கூடுதல் கவனம் தேவை. திடீரென்று பெருந்தொகை கிடைக்க வாய்ப்புண்டு. 2019 அக்டோபருக்கு சுற்றுலா செல்ல வாய்ப்புண்டு. செலவில் சிக்கனம் அவசியம். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். காதல் வாழ்வில் மகிழ்ச்சியான திருப்புமுனை ஏற்படும்.
விசாகம்1,2,3ம் பாதம்: வெளியூர், வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் செல்வீர்கள். வீண் சந்தேகம், கருத்து வேறுபாட்டுக்கு இடம் கொடுக்க வேண்டாம். நண்பர், உறவினருடன் அனுசரித்து செல்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் நன்மை கிடைக்கும். 2019 அக்டோபர் முதல் கடினமாக உழைத்து தொழிலில் முன்னேறுவீர்கள். மனைவியின் உடல்நிலை சீராகும். பிள்ளைகளால் நன்மை காண்பீர்கள்.