உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலாடியில் பங்குனி பொங்கல் விழா

கடலாடியில் பங்குனி பொங்கல் விழா

கடலாடி:கடலாடி அருகே ஏ.புனவாசல் ஒத்தவீடு கிராமம் உய்யவந்த அம்மன், பாதாள காளியம்மன் கோயிலில் பொங்கல் விழா நடந்தது. நேற்று (ஏப்., 12ல்) காலை 7:00 மணிக்கு மேல் பால்குடம் ஊர்வலத்தில் நேர்த்திக்கடன் பக்தர்கள் பங்கேற்றனர்.

ஏராளமான பெண்கள் பொங்கலிட்டனர். அன்னதானம் நடந்தது. மாலையில் உலக நன்மைக்கான விளக்கு பூஜையும், இரவு 10 மணிக்கு வள்ளி திருமணம் நாடகமும் நடந்தது. ஏற்பாடுகளை
பூஜகர் செந்தூர்பாண்டி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !