குஜிலியம்பாறை கோயில்களில் கும்பாபிஷேகம்
ADDED :2382 days ago
குஜிலியம்பாறை:பாளையம் பேரூராட்சி வீரக்கவுண்டன்பட்டியில் உள்ள மாரியம்மன், பகவதியம்மன், காளியம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்திற்கு ஊர் பெரியவர் செம்பகவுண்டர் தலைமை வகித்தார். வேடசந்தூர்
எம்.எல்.ஏ., பரமசிவம், பிரமுகர்கள் ஜி.எஸ். வீரப்பன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் பெருமாள், ஆலய வடிவமைப்பு ஒப்பந்ததாரர் குணசேகரன், தான்தோன்றிமலை, மலைராமன்
பட்டாச்சாரியார் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தில் கருடன் வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.