வில்லியனுார் கோவிலில் செடல் உற்சவம் துவக்கம்
ADDED :2386 days ago
வில்லியனுார்:வில்லியனுார் முத்தாலவாழி மாரியம்மன் ஆலய செடல் பிரம்மோற்சவ விழா துவங்கியது.வில்லியனுார் மேலண்ட வீதியில் உள்ள முத்தாலவாழி மாரியம்மன் கோவில் செடல் பிரம்மோற்சவ விழா கடந்த 7ம் தேதி கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்து வரும் விழாவில் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகமும், பிற்பகல் 1:00 மணியளவில் அன்னதானமும், இரவு 7:00 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி மாட வீதியுலா நிகழ்ச்சி நடந்து வருகிறது.பொது உற்சவமாக வரும் 16ம் தேதி செடல் உற்சவம் நடக்கிறது. அன்று காலையில் சிறப்பு அபிேஷகம், பிற்பகல் சாகை வார்த்தல், மாலையில் செடல் உற்சவம் நடக்கிறது. 17 ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 18 ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.