உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் மூலவர் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்

திருவண்ணாமலையில் மூலவர் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள, திருநேர் அருணாசலேஸ்வரர் கோவில் கருவறை மீது, சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், அருணாசலேஸ்வரர் கோவிலின் நேர் பின்புறம், திருநேர் அருணாசலேஸ்வரர்  கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை மாத பிறப்பின் முதல் நாளன்று, அருணாசலேஸ்வரர் லிங்கம்  மூலவர் மீது, சூரிய ஒளி விழும் அபூர்வ  நிகழ்வு நடப்பது வழக்கம். இதையொட்டி, நேற்று சூரிய உதயத்தின்போது, அபூர்வ நிகழ்வு நடந்தது. இதையடுத்து, அருணாசலேஸ்வரர் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !