சீரடி சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம்
ADDED :2397 days ago
திண்டிவனம்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சீரடி சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம் நடந்தது. திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகில் உள்ள சீரடி சாய் சக்தி கணேசா மண்டலி டிரஸ்ட் கோவிலில் தமிழ் புத்தாண்டு மற்றும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை சீரடி சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம், அதனை தொடர்ந்து ஆராதனை நடந்தது. சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திண்டிவனம் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஆசைதம்பியின் சாய்பாபா சிறப்பு சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை டிரஸ்ட்நிர்வாகிகள் செய்திருந்தனர்.