செஞ்சி வெங்கட்ரமணருக்கு ஊஞ்சல் சேவை
ADDED :2397 days ago
செஞ்சி: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, செஞ்சி பகுதியில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
செஞ்சி காந்தி பஜார் செல்வவிநாயகர் கோவிலில் அதிகாலை 5.௦௦ மணிக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் காப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. செஞ்சிக் கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில், காலை 9.௦௦ மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், பகல் 12.00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணர் ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார்.விழாவில், பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவன தாளாளர் ரங்கபூபதி, வழக்கறிஞர் வைகை தமிழ்செல்வன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.