உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தமிழ் புத்தாண்டு விழா

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தமிழ் புத்தாண்டு விழா

மேல்மருவத்தூர்:ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தமிழ் புத்தாண்டு விழாவில், பக்தர்களுக்கு நலத்திட்ட உதவிகளை, பங்காரு அடிகளார், நேற்று வழங்கினார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தமிழ் புத்தாண்டை யொட்டி, நேற்று (ஏப்., 14ல்) அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கள இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பக்தர்களுக்கு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர், செந்தில்குமார், பிரசாதம் வழங்கினார்.

பின், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் நடந்தது.பங்காரு அடிகளார் பங்கேற்று, 10 ஜோடிகளுக்கு திருமணம், ஆறு ஜோடிகளுக்கு மணிவிழா மற்றும் 35 பெண்களுக்கு தையல் இயந்திரம் உட்பட, 424 பக்தர்களுக்கு, 13 லட்சம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்தூர் ஆதிரபாசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் மற்றும் சக்தி பீடத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !