உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னேரி கோவில்களில் புத்தாண்டு பூஜை

பொன்னேரி கோவில்களில் புத்தாண்டு பூஜை

பொன்னேரி:தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷே கங்கள் நடைபெற்றன.தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு, நேற்று (ஏப்., 14ல்), பொன்னேரி, ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில், திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில், தேவதானம் ரங்கநாதர் கோவில், திருப்பாலைவனம் பாலீஸ்வரர், மீஞ்சூர், வரதாஜ பெருமாள், ஏகாம்பரநாதர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.பொன்னேரி, திருவேங்கிடபுரம், பொன்னியம்மன், தடப்பெரும்பாக்கம் லட்சுமியம்மன் கோவில்களில் அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.பொன்னேரி, அரிஅரன் பஜார் வீதியில் உள்ள பரத்வாஜ ஆஞ்சநேயர் கோவிலில், வழிபாடுகளும், ராமநவமியை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவமும் விமரிசையாக நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !