கோபிசெட்டிபாளையம் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு கோவில்களில் கோலாகலம்
ADDED :2400 days ago
கோபிசெட்டிபாளையம்: தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு, கோபி கோவில்களில் ஏராளமான பக்தர்கள் நேற்று (ஏப்., 14ல்) சுவாமி தரிசனம் செய்தனர். கோபி பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவிலில் அம்மன் சன்னதி எதிரேயுள்ள குண்டத்தில், பெண் பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர். இதேபோல், கோபி அருகே வேலுமணி நகர், சக்தி விநாயகர் கோவிலில், 25 கிலோவில், 21 வகையான கனிகளால், பிரம்மாண்ட அலங்காரம் செய்திருந்த மூலவரை, பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், கோபி சாரதா மாரியம்மன் கோவிலில், சித்திரை பிறப்பை முன்னிட்டு, அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பலர் புத்தாடை அணிந்து கோவிலுக்கு வந்திருந்தனர்.