திருவண்ணாமலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கிரிவலம் வந்து வழிபாடு
ADDED :1 days ago
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்ரவர்த்தி, கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, திருவண்ணாமலையிலுள்ள அண்ணாமலையார் மலையை, 14 கி.மீ., துாரம் நடந்து கிரிவலம் சென்று, கிரிவலப்பாதையிலுள்ள அஷ்ட லிங்கங்களை வழிபட்டனர். கிரிக்கெட் வீரர்கள் கிரிவலம் செல்வதை அறிந்த கிரிக்கெட் ரசிகர்கள், அவர்களுடன் மொபைல்போனில் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர். நேற்று காலை, கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்ரவர்த்தி, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர். அவர்களுக்கு கோவில் குருக்கள் பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.