உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டரமாணிக்கத்தில் மகா சண்டி மகாயாகம்; அம்மனுக்கு அபிஷேகம்

கண்டரமாணிக்கத்தில் மகா சண்டி மகாயாகம்; அம்மனுக்கு அபிஷேகம்

திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் நடந்தது. யாகசாலை பூஜைகள் மார்ச் 10 காலையில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோ பூஜைகள் நடந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. மாலையில் வாஸ்து சாந்தி உள்ளிட்ட  பூஜைகள் நடந்தது. இரண்டாம் நாளில் யாகசாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்து மூல மந்திர ஜெபம் நடந்தது. மாலையில்  விக்னேஸ்வர பூஜை, அவரண தேவதா அர்ச்சனை, சண்டி பாராயணம் மூல மந்திர ஹோமம் நடந்தது. நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், தேவி ஆவரண அர்ச்சனை, மஹா சண்டி மகாயாகம், சுவாஷினி பூஜை, கன்யா பூஜை, வடுக பூஜை, தம்பதி பூஜை, மகா பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பின்னர் மாணிக்க நாச்சி அம்மனுக்கு அபிஷேகம் நடந்து அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. ஏரளாமானோர் பங்கேற்று யாகம், அம்மனை தரிசித்தனர்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !