வெள்ளகோவில் ஐயப்ப சுவாமி கோவிலில் விஷூ சிறப்பு வழிபாடு
ADDED :2402 days ago
வெள்ளகோவில்:வெள்ளகோவில், குமார வலசில் உள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவிலில், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் விஷூ சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது.
இதையொட்டி காலை கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், கலசாபிஷேகம், தொடர்ந்து சுவாமிக்கு தங்கக்கவசம் அணிந்து, பக்தர்களுக்கு ஐயப்ப சுவாமி அருள்பாலித்தார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, கைநீட்டம் பெற்று கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஐயப்பா சேவா சங்கம் மற்றும் பூஜா சங்கத்தினர்
மேற்கொண்டனர்.