உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லதைச் செய்யுங்கள்

நல்லதைச் செய்யுங்கள்

பிறக்கும் போதே மனிதனுக்கு மரணம் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் மனிதன் உலகம் உள்ளளவும் வாழப் போவதாக நினைத்துக் கொண்டு அவன் ஆடும் ஆட்டம் கொஞ்சமல்ல.

மரணம் குறித்து பைபிள் சொல்வதைக் கேளுங்கள்.

* புழுதியிலிருந்து வந்தாய்; புழுதிக்கே திரும்பிப் போவாய்.
* நாம் எல்லோரும் இலையைப் போல் வெளிறிப் போவோம்.
* மரங்களின் மூலவேர் அருகே கோடரி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால், நற்கனி கொடாத ஒவ்வொரு மரமும் அடியோடு வெட்டப்பட்டு அக்னியிலே போடப்படும்.
* பாவத்தின் சம்பளம் மரணம்.
* வாழும் காலத்தில் நல்லதை மட்டுமே செய்ய வேண்டும் என்பதையே இந்த வசனங்கள் வலியுறுத்துகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !