உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆம்பளை இல்லாத ஊர்

ஆம்பளை இல்லாத ஊர்

வானரங்கள் வாழும் ஊர் கிஷ்கிந்தை. இங்கு ஆண் குரங்கு ஒன்று கூட இல்லை. ஏன் தெரியுமா? அங்கிருந்த பெண் குரங்குகள், சீதையை மீட்பதில் ராமருக்கு உதவி செய்ய விரும்பின. இதற்காக தங்களின் தந்தை, சகோதரர்கள், கணவர், பிள்ளைகள் என அனைவரையும் போருக்கு அனுப்பி வைத்தன. வானரப் படையின் உதவியால் அரக்கன் ராவணனை தோற்கடித்த ராமர், புஷ்பக விமானத்தில் சீதையுடன் அயோத்திக்கு புறப்பட்டார். வழியில் கிஷ்கிந்தை வந்ததும், ராமருடன்  வந்த சுக்ரீவன் வானரப் பெண்களை சந்திக்கும்படி ராமரை வேண்டினான். சம்மதித்த ராமரும் சீதையுடன் அவர்களுக்கு ஆசியளித்து மகிழ்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !