திருவெற்றியூரில் திருக்கல்யாணம்
ADDED :2403 days ago
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் கடந்த 10ம் தேதி துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம் நடந்தது. வல்மீகநாதர் பிரியாவிடையுடனும், சிநேகவல்லிதாயார் திருமண கோலத்தில் காட்சியளித்தனர். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க இரவு 10:30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. தேவஸ்தான கண்காணிப்பாளர் பரமேஸ்வரபாண்டியன், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 18 ந் தேதி தேரோட்டமும், மறுநாள் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறும்.