உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சியில், திருப்பாடுகளின் குருத்தோலை ஞாயிறு

பொள்ளாச்சியில், திருப்பாடுகளின் குருத்தோலை ஞாயிறு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், புனித வெள்ளியையொட்டி முதல் நிகழ்வான திருப்பாடுகளின் குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி நேற்று முன்தினம் (ஏப்.,14ல்) நடந்தது.

பொள்ளாச்சியில், புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவர்கள் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இந்த வாரம் புனித வாரமாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். புனித வெள்ளி மற்றும் புனித வாரத்தையொட்டி முதல் நிகழ்வான திருப்பாடுகளின் குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி நேற்று முன்தினம் (ஏப்., 14ல்) நடந்தது.

விழாவையொட்டி, புனித லூர்து அன்னை ஆலயம் பங்கு தந்தை ஹென்றி ஆண்டனி தலைமையில், குருத்து ஓலைகள் புனிதம் செய்யப்பட்டு, எல்.எம்.எஸ்., மழலையர்
பள்ளியில் இருந்து, குருத்து ஓலைகள் ஏந்தியபடி பவனியாக கிறிஸ்தவர்கள் புனித லூர்து அன்னை ஆலயத்திற்கு சென்றனர். பொள்ளாச்சி பகுதியில் உள்ள மற்ற தேவாலங்களில், கிறிஸ்தவர்கள் குருத்து ஓலைகள் ஏந்தியபடி பவனியாக சென்றனர். அங்கு திருப்பலி
நிறைவேற்றப்பட்டது.

வால்பாறைவால்பாறை சி.எஸ்.ஐ., தேவாலயம் மற்றும் ஆர்.சி., சர்ச் ஆகியவை இணைந்து, குறுத்தோலை ஞாயிறு பவனி நடத்தியது.வால்பாறை நகரின் முக்கிய வீதி வழியாக பேரணியாக சென்ற கிறிஸ்தவர்கள், சி.எஸ்.ஐ., தேவாலயத்தை சென்றடைந்தனர்.அதனை தொடர்ந்து, சி.எஸ்.ஐ., தேவாலய மறை மாவட்ட தலைவர் ஜெயராஜ், ஆர்.சி., சர்ச் ஆலய பங்கு தந்தை மரிய ஜோசப் ஆகியோர் தலைமையில் சிறப்பு ஜெபக்கூட்டமும், திருப்பலியும் நடைபெற்றது.

இதில், நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.இதே போல், ரொட்டிக்கடை, கருமலை வேளாங்கன்னிமாதா ஆலயம், சிறுகுன்றா, முடீஸ், சின்கோனா, சோலையாறு டேம் உள்ளிட்ட கிறஸ்துவ ஆலயங்களில் குறுத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி கிறிஸ்துவர்கள் ஊர்வலமாக சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !