உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லிக்கவுண்டன்பாளையம் நல்லீசுவரர் கோவில் விழா

நல்லிக்கவுண்டன்பாளையம் நல்லீசுவரர் கோவில் விழா

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அடுத்த,நல்லிக்கவுண்டன் பாளையம் நல்லீசுவரர் கோவிலில், இரண்டாம் ஆண்டு பெருவிழா நடந்தது.

கிணத்துக்கடவு அருகே, தேவராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது நல்லிக்கவுண்டன்பாளையம். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், பழமை வாய்ந்த நல்லீசுவரர் கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், இரண்டாம் ஆண்டு பெருவிழா நேற்று முன்தினம் (ஏப்., 14ல்) நடந்தது. விழாவை முன்னிட்டு, அதிகாலை, 5:00 மணி முதல் வேள்வி வழிபாடு நடந்தது.

தொடர்ந்து சிறப்பு திருமஞ்சன வழிபாடு மற்றும் நல்லீசுவரர் அலங்கார வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நல்லீசுவரரை வழிபட்டு, பிரசாதம் பெற்றனர்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !