திருப்பூரில் காஞ்சி காமாட்சியம்மன் கோவில் சித்ரா பவுர்ணமி விழா துவக்கம்
திருப்பூர்:திருப்பூர் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில், 23ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி பொங்கல் விழா இன்று (ஏப்., 16ல்) துவங்குகிறது.திருப்பூர் வாய்க்கால் தோட்டம், காஞ்சி
காமாட்சியம்மன் கோவிலுக்கு, காவிரி கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்துவந்து, கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது.
காலை, 8:00 மணிக்கு, கணபதி ஹோமம், பாலாம்பிகை அம்மன் அலங்காரம் நடக்கும். மாலை, 5:00 மணிக்கு, கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து கலசம் எடுத்து
வருகின்றனர்.நாளை (17 ம் தேதி), சமயபுரம் மாரியம்மன் அலங்காரம், சிறப்பு பூஜை, வேலன் நகர் மாரியம்மன் கோவிலில் இருந்து பூக்கள் எடுத்து வந்து பூச்சொரிதல் நிகழ்ச்சியும், மகளிர் அணியினரின் கோலாட்டம், கும்மியாட்டமும் நடைபெறும்.
வரும், 18 ம் தேதி, பொங்கல் மாவிளக்கு, சுயம்வர பார்வதி யாகம், காமாட்சியம்மன் சிறப்பு அலங்காரம், திருவிளக்கு பூஜை நடக்கிறது. வரும், 19ம் தேதி, காஞ்சி காமாட்சி, ஏகாம்ப ரேஸ்வரர் திருக்கல்யாணம், மதியம் சிறப்பு பூஜையும், மாலையில் அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சியும் நடக்கிறது;
வரும், 20ம் தேதி காலை, 10:30 மணிக்கு மகா அபிஷேகம், மதியம், 12:30 மணிக்கு, சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.