உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூரில் சித்ரா பவுர்ணமி விழா

கடலூரில் சித்ரா பவுர்ணமி விழா

கடலூர் : கடலூர், புதுப்பாளையம் தரைகாத்த காளியம்மன் கோவிலில், வரும் 18ம் தேதி, சித்ரா பவுர்ணமி விழா நடக்கிறது. விழாவையொட்டி, வரும் 18ம் தேதி இரவு 10:30 மணி முதல் இரவு 12:00 மணி வரை அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சித்ரா பவுர்ணமி விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது.மறுநாள் 19ம் தேதி காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலம் மற்றும் பால் அபிஷேகம் நடக்கிறது. 20ம் தேதி இரவு 7:00 மணிக்கு அம்மன் படையல், 7:30 மணிக்கு வீரன் படையல் நடக்கிறது.

ஆனந்த மாரியம்மன்கடலூர் அமர்ந்தவாழி அம்மன் கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ள ஆனந்த மாரியம்மன் கோவிலில், வரும் 18ம் தேதி, சித்ரா பவுர்ணமி விழா நடக்கிறது.மாலை
6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, நள்ளிரவு 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !