உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னூர் குண்டம் திருவிழாவில் பரவசம் ஆயிரம் பேர் பங்கேற்பு

குன்னூர் குண்டம் திருவிழாவில் பரவசம் ஆயிரம் பேர் பங்கேற்பு

குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்.குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை
திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது .தொடர்ந்து தினமும் உபயதாரர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன .

நேற்று (ஏப்., 15ல்) குண்டம் திருவிழா நடந்தது. முன்னதாக, தந்தி மாரியம்மன் கோவிலில் இருந்து, சிம்ம வாகனத்தில் அம்மன் பவனி வந்தார். தொடர்ந்து, விரதம் மேற்கொண்ட சிறுவர்
சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கினர். பலரும் சாட்டையடி நடத்தினர். சிலர் குழந்தைகளை சுமந்து தீ குண்டம் இறங்கினர்.

இதற்கான ஏற்பாடுகளை இந்து மற்றும் பிற மதங்களின் சங்கத்தினர், உபயதாரர்கள் பக்தர்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி பல்வேறு அமைப்பினர் சார்பில் விநாயகர் கோவில், வி.பி.,தெரு உட்பட பல இடங்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டன. விவேகானந்தர் நற்பணி மன்றத்தின் சார்பில் கூட்ட நெரிசலை தவிர்க்க பிரம்மாண்ட எல்.ஈ.டி வைக்கப்பட்டு இருந்தது. இலவச மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. நாளை 17 ல்  தேரோட்டம் , 19ல் முத்துப்பல்லக்கு ஆகியவை நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !