பெத்தநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
ADDED :2407 days ago
பெத்தநாயக்கன்பாளையம்: ஏத்தாப்பூர், சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி, நேற்று (ஏப்., 15ல்) பால்குட ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏத்தாப்பூர் வசிஷ்ட நதிக்கரை, சமயபுரம் மாரியம்மனுக்கு எட்டாம் ஆண்டு சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் நேற்று (ஏப்., 15ல்) காலை உருளுதண்டம் போட்டு வேண்டுதல் நிறைவேற்றினர். பின்னர் பால்குடம், அலகு குத்துதல், சக்தி கரகம் மற்றும் பம்பை மேளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது. நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.
பின்னர், பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று 16ம் தேதி காலை, 10:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம்
நடக்கவுள்ளது.