உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் திருவிழா

கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் திருவிழா

உளுந்தூர்பேட்டை : கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவில், நாளை 17ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழா, கடந்த 2ம் தேதி சாகை வார்த்தலுடன்
துவங்கியது.கூவாகம், தொட்டி, நத்தம் உள்ளிட்ட 7 கிராமங்களில் இருந்து பெண்கள் கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, மாரியம்மனுக்கு படையலிட்டனர்.3ம் தேதி, பந்தலடியில் ஊர் பிரமுகர்களுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி, நேற்று 15ம் தேதி, கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சி நடந்தது.இன்று (16ம் தேதி) இரவு, சுவாமி திருக்கண் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து, திருநங்கைகள், பூசாரிகளின் கையால் தாலிக் கட்டிக்கொண்டு, இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர்.இவ்விழாவில் பங்கேற்பதற்காக, பல்வேறு பகுதியிலிருந்து திருநங்கை கள் கூவாகத்தில் குவிந்துள்ளனர்.

நாளை (17ம் தேதி) காலை 6.30 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. குமரகுரு எம்.எல்.ஏ. வடம் பிடித்து, துவக்கி வைக்கிறார். 18ம் தேதி விடையாற்றி உற்சவம். 19ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !