உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இளையனார்குப்பத்தில் லட்சதீப திருவிழா

இளையனார்குப்பத்தில் லட்சதீப திருவிழா

ரிஷிவந்தியம் : இளையனார்குப்பம் கிராமத்தில் தமிழ்புத்தாண்டையொட்டி லட்சதீப திருவிழா
நடந்தது.

ரிஷிவந்தியம் அடுத்த இளையனார்குப்பம் கிராமத்தில் பழமை வாய்ந்த செல்வவிநாயகர் கோவில் உள்ளது.

ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டையொட்டி இக்கோவிலில் லட்சதீப திருவிழா கொண்டாடப் படும். அதேபோல் இந்தாண்டு 77ம் ஆண்டு லட்சதீப திருவிழா நேற்று முன்தினம்
(ஏப்., 14ல்) விமர்சையாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியையொட்டி காலையில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னதானம்
வழங்கப்பட்டது. மாலை பொதுமக்கள் கோவிலின் முன்பு தீபங்களை ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து இரவு மாரியம்மன் திருவீதியுலா நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !