உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்கிரவாண்டி புவனேஸ்வரர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை

விக்கிரவாண்டி புவனேஸ்வரர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை நடந்தது.

சித்திரை தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு வினாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி, புவனேஸ்வரி, புவனேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.மகா தீப ஆராதனை நடந்தது. இரவு 9 மணிக்கு புவனேஸ்வரி சமேத புவனேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி மாடவீதியாக
ஊர்வலம் வந்தது. அபிஷேகம் மற்றும் பூஜைகளை ரவி குருக்கள், வேதாத்திரி குருக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

விக்கிரவாண்டி கிராம மக்கள் சாமி தரிசனம் செய்தனர் விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !