உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி பாதுகாப்பு பணியில் 1,700 போலீசார்: எஸ்.பி., தகவல்

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி பாதுகாப்பு பணியில் 1,700 போலீசார்: எஸ்.பி., தகவல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வரும், 18, மாலை, 7:11 மணி முதல், மறுநாள் மாலை, 5:20 மணி வரை, சித்ரா பவுர்ணமி திதி உள்ளது. இந்த நேரத்தில் பல லட்சம் பக்தர்கள்
கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மனை தரிசித்து வழிபட்டு செல்வர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு, அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் தீவிரமாக
செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து, எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: சித்ர பவுர்ணமிக்கு, ஏழு லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின்
பாதுகாப்பு பணியில் இரண்டு எஸ்.பி., மூன்று ஏ.டி.எஸ்.பி., 16 டி.எஸ்.பி., உள்பட 1,700 காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 22 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப் பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. கிரிவலப்பாதை, கோவில் வெளிப்புறம், உட்புறம் ஆகிய இடங்களில 320 சிசிடிவி கேமராக்கள், மற்றும் ஆளில்லா குட்டி விமானம்  மூலம் கண்காணிக்கப்பட உளளது. 2,895 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !