தபசு திருக்கோலத்தில் விசாலாட்சி அம்மன்
ADDED :2407 days ago
பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.,9 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதிவலம் வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு திக்விஜயமும், நேற்று காலை 9:00 மணிக்கு விசாலாட்சி அம்மன் தபசு திருக்கோலத்துடன் எழுந்தருளினார். மாலை 5:00 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி, மாலை மாற்றல் நிகழ்ச்சிக்குப் பின் இரவு 7:00 மணிக்கு கோயிலை அடைந்தார். இன்று காலை 11:00 மணிக்கு மேல் விசாலாட்சி அம்மனுக்கும், சந்திரசேகரசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.