மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரைதிருவிழா துவக்கம்
மானாமதுரை:சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் காப்புக்கட்டுதலுடன் சித்திரைதிருவிழா துவங்கியது.மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள்நடைபெறும்.விழா நாட்களின் போது சுவாமி பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிக்கு எழுந்தருளுவார்.விழாவின் துவக்கமாக மூலவர் சுந்தரராஜப்பெருமாளின்கைகளில் காப்பு கட்டப்பட்டு பின்னர் அபிஷேக ஆராதனை நடைபெற்று முதலாம்மண்டகப்படியான மானாமதுரை பேரூராட்சி அலுவலக மண்டகப்படிக்கு சுவாமி எழுந்தருளினார்.
முக்கிய நிகழ்ச்சிகளான எதிர் சேவை வரும் 18 ந் தேதிஇரவு 10:00 மணிக்கும், 19 ந் தேதி காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிரேவைகை ஆற்றுக்குள் இறங்கும் விழாவும், 20ந் தேதி தேதி இரவு அனைத்து மதத்தினரும் ஒன்றாகஆற்றில் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிடும் நிகழ்ச்சியும்,21 ந் தேதி தசாவதார நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளைசிவகங்கை தேவஸ்தான அதிகாரிகள் இளங்கோ,சரவணன்,பரம்பரை ஸ்தானீகர்கள் கிருஷ்ணதாஸ்,பாபுஜிசுந்தர் ஆகியோர் செய்து வருகின்றனர்.