உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீர்காழி சட்டைநாதர் கோவிலில் தேரோட்டம்

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் தேரோட்டம்

நாகை: சீர்காழி சட்டைநாதர் கோயில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.

சீர்காழியில் சட்டைநாதர் கோவில் அமைந்துள்ளது தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர் தோணியப்பர் சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். தேவார நால்வர்களில் ஒருவரான ஞானசம்பந்தருக்கு இத்தலத்தில் உமையம்மை ஞானப்பால் அளித்ததாக ஐதீகம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்ஸவத்தின் இரண்டாம் நாளாக திருமுலைப்பால் விழா நடைபெறுகிறது இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரம்மோற்சவ விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது மறுநாள் திருமுலைப்பால் விழா நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது. தேர்த் திருவிழாவை முன்னிட்டு விநாயகர் முருகன் சுவாமி அம்பாள் ஞானசம்பந்தருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது தொடர்ந்து சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர் அனைத்து கிராம மக்களும் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். வழியில் பக்தர்கள் சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர் எடுத்து தேர் நான்கு வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது விழா ஏற்பாடுகளை கோவில் சூப்பிரண்டு செந்தில் செய்திருந்தார் தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !