பல்லடம் மாகாளியம்மன் கோவில் பொங்கல் சாட்டு விழா
ADDED :2408 days ago
பல்லடம் : பல்லடம் அருகே மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழாவில், அம்மனுக்கு, பொரி உற்சவ வழிபாடு நடந்தது.பனப்பாளையத்தில், விநாயகர், மாகாளியம்மன், மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம், மாகாளியம்மனுக்கு பொங்கல் விழா நடத்தப்படுவது வழக்கம். அதில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்று, மாவிக்கு, பூவோடு எடுத்து, அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்துவர்.நடப்பு ஆண்டு பொங்கல் விழா, நேற்று முன்தினம் (ஏப்., 15ல்) இரவு, 7:00 மணிக்கு, பூச்சாட்டுதல் நிகழ்வுடன் துவங்கியது.
தொடர்ந்து, மாகாளியம்மனுக்கு பொரி உற்சவ வழிபாடு நடந்தது. பொரியால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பின், பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.அபிஷேகம், மற்றும் ஆராதனைகளுக்கு பின், மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பொங்கல் திருவிழா வரும், 26 வரை நடக்கிறது.