உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

உடுமலை மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

உடுமலை : உடுமலை அருகே லிங்கம்மாவூரில், உச்சிமாகாளியம்மன் கோவில், கும்பாபி ஷேகம் இன்று (ஏப்., 17ல்)நடக்கிறது.குடிமங்கலம் ஒன்றியம், கொங்கல்நகரம் லிங்கம் மாவூரில், பழமை வாய்ந்த விநாயகர், உச்சிமாகாளியம்மன், முனீஸ்வரர் கோவில்கள், புனரமைக்கப்பட்டு, நேற்று (ஏப்., 16ல்) கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று (ஏப்., 16ல்) காலை, விக்னேஸ்வர பூஜை, புண்யாவாசகம், பஞ்சகவ்யம், கோபூஜை, தீர்த்தம் எடுத்து வருதல் உட்பட பூஜைகள் நடந்தன.இன்று (ஏப்., 17ல்), அதிகாலை இரண்டாம் கால யாக வேள்வி, வேதம் ஓதுதல், யாகவேள்வியில் இருந்து, மூல மூர்த்திக்கு உயிர் கொடுத்தல் ஆகிய பூஜைகள் நடக்கிறது.

காலை, 6:00 மணிக்கு மேல், யாகவேள்வியில் இருந்து கலசங்கள் பயணம் மேற்கொள்ளுதல், விநாயகர், உச்சிமாகாளியம்மன், முனீஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, மகாஅபிஷேகம், அலங்கார பூஜை, பத்துவகை தரிசனம், பத்துவகை தானம், தீபாராதனை ஆகிய சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கிராம விழாக்குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !