கடலூர் திருத்தினை முருகன் கோவிலில் சித்ரா பவுர்ணமி காவடி பூஜை
ADDED :2408 days ago
கடலூர்: குறிஞ்சிப்பாடி அடுத்த திருத்தினை நகரில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில், சித்ரா பவுர்ணமி விழா நடக்கிறது.திருத்தினை நகர், மருத்துவமனை தெருவில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில், சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி, நாளை 18ம் தேதி இரவு கணபதி பூஜை நடக்கிறது. மறுநாள் (19 ம் தேதி) காலை 7:30 மணிக்குமேல், காவடி வீதியுலா நடக்கிறது. மதியம் 1:30 மணிக்கு மேல் பாலமுருகனுக்கு அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து அன்ன தானமும் நடக்கிறது. இரவு வாண வேடிக்கையுடன், சுவாமி வீதியுலா நடக்கிறது. முன்னதாக திருமாணிக்குழி பழனிவேல் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடக்கிறது.