சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா
ADDED :2408 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி நாடார் பேட்டை பத்ரகாளியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை யொட்டி பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலின் பங்குனித் திருவிழா ஏப்., 9ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 8ம் நாளான ஏப்., 16ம் காலை 10:30 மணிக்கு பால்குட விழா நடந்தது. பக்தர்கள் நந்தவனத்தில் இருந்து பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
மாலை 5:30 மணிக்கு பக்தர்கள் 101 அக்னிசட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு முளைப்பாரி எடுத்தும், மாவிளக்கு வைத்தும், தனி அக்னி சட்டி எடுத்தும் அம்மனை வழிபட்டனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.