உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி நெகனூர் பொன்னிபுரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்

செஞ்சி நெகனூர் பொன்னிபுரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்

செஞ்சி:நெகனூர் பொன்னிபுரீஸ்வரர் கோவிலில் இன்று (ஏப்., 17ல்) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. செஞ்சி தாலுகா நெகனூர் கிராமத்தில் பொன்னியம்மன் உடனுறை பொன்னிபுரீஸ் வரர், சப்தமாதாக்கள் மற்றும் நவக்கிரக கோவில்கள் உள்ளது. இங்கு திருப்பணிகள் முடிந்து இன்று மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று (ஏப்., 16ல்) காலை கணபதி ஹோமம், மாலை கோபூஜை, வாஸ்து சாந்தி, முதல்கால யாக சாலை பூஜைகள் நடந்தன. இன்று (17 ம் தேதி) காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, 8 மணிக்கு மகா அபிஷேகம், 9 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தொடர்ந்து கடம் புறப்பாடு 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது, 11 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. இரவு சாமி வீதி உலா, வாணவேடிக்கை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !