சேலம் புஷ்பங்கி சேவையில் ஆஞ்சநேயர்
ADDED :2408 days ago
சேலம்: சேலம், பொன்னம்மாபேட்டை, ஆஞ்சநேயர் கோவிலில், கடந்த, 14ல், ராமநவமி உற்சவம் தொடங்கியது. நேற்று 16ல், மூலவர் ஆஞ்சநேயருக்கு, பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, புஷ்பங்கி சேவையில் அருள் பாலித்தார். வரும், 22ல் சீதா திருக்கல்யாண உற்சவம், 23ல் வசந்த உற்சவம், 24ல் ராமர் பட்டாபிஷேக கோலத்தில் திருவீதி உலா, ஏப்., 25ல் விடையாற்றி உற்சவத்துடன் ராமநவமி விழா நிறைவடையும். ஏற்பாடுகளை, கோவில் பட்டாச்சாரியார் குணா, நிர்வாகிகள், கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.