உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெ.நா.பாளையம் மாரியம்மன் கோவிலில், தேரோட்டம் கோலாகலம்

பெ.நா.பாளையம் மாரியம்மன் கோவிலில், தேரோட்டம் கோலாகலம்

பெ.நா.பாளையம்: மாரியம்மன் கோவிலில், சித்திரை தேரோட்டம் கோலகலமாக நடந்தது. பெத்தநாயக்கன்பாளையம் அருகே, ஏத்தாப்பூர், வசிஷ்ட நதிக்கரையிலுள்ள, சமயபுரம்
மாரியம்மன் கோவிலில், எட்டாம் ஆண்டு சித்திரை தேர் திருவிழா, நேற்று 16ல் நடந்தது. காலை, 10:30 மணிக்கு, தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. தேரில், உற்சவர் சமயபுரம் மாரியம்மன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

ஏராளமான பக்தர்கள், தேரை வடம்பிடித்து, கோவிலை சுற்றி இழுத்துவந்தனர். பின், அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, மாரியம்மனுக்கு, தங்ககவசம் சாத்துதல் உற்சவம், சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !