உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் ராமநவமி விழா கொண்டாட்டம்

சேலம் ராமநவமி விழா கொண்டாட்டம்

சேலம்: அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், இஸ்கான் சார்பில், பகவான் ராமரின் அவதார தினம், உலகம் முழுவதும் உள்ள, இஸ்கான் கோவில்களில் கொண்டாடப்பட்டது. அதன்படி,
சேலம், கருப்பூரில் உள்ள, இஸ்கான் கோவிலில், நேற்று முன்தினம் (ஏப்., 15ல்) கொண்டாடப் பட்டது. மாலையில், கிருஷ்ணர், பலராமருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, பஜனை, அபிஷேகம், ராமலீலா தலைப்பில் உபன்யாசம் நடந்தது.

திரளானோர், பகவானின் ஹரே ராம, ஹரே கிருஷ்ண திருநாமத்தை உச்சரித்து, மகிழ்ச்சி அடைந்தனர். பின், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !