விக்கிரவாண்டி புத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி போலீஸ் குடியிருப்பில் அமைந்துள்ள புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று (ஏப்., 17ல்) நடந்தது.
விக்கிரவாண்டி புத்துமாரியம்மன் கோவிலில் புதிதாக துர்க்கையம்மன், ஆஞ்சநேயர், நாகம்மன், நவக்கிரக சன்னதிகள் அமைக்கப்பட்டது அதன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புத்துமாரியம் மனுக்கு விஷேச அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கணபதி பூஜை வாஸ்து சாந்தி நடைபெற்று ,காலை 6 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை முடிந்து பூர்ணாஹூதி நடந்து, கடம் புறப்பாடு துவங்கியது. கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து துர்க்கை அம்மன், நவக்கிரகம், ஆஞ்சநேயர், நாகம்மன் சன்னதிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜை மற்றும் கும்பாபிஷேகத்தை விக்கிர வாண்டி ரவி குருக்கள் தலைமையில், பிரகாஷ் அடிகளார், பழனி ஆகியோர் செய்தனர். விக்கிரவாண்டி மக்கள், பக்தர்கள் திரளாக தரிசனம் செய்தனர்.