உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி முக்குணம் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

செஞ்சி முக்குணம் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

செஞ்சி:முக்குணம் முக்குன்றநாதர் உடையார் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

செஞ்சி தாலுகா முக்குணம் கிராமத்தில் உள்ள உமையவள் உடனுறை முக்குன்றநாத உடையார் கோவிலில், புதிதாக விநாயகர், ஆஞ்சநேயர், ஹயக்கிரீவர், காலபைரவர், சனீஸ்வரர், சன்னதிகள் கட்டியுள்ளனர்.

இதற்கான மகா கும்பாபிஷேகம் நேற்று (ஏப்., 17ல்) நடந்தது. இதையொட்டி, கடந்த 16ம் காலை 7.00 மணிக்கு கோபூஜை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமம் நடந்தது. மாலை 5.00 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜை, இரவு அஷ்ட பந்தனம் சாற்றுதல், தெய்வங்கள் பிரதிஷ்டை நடந்தது. நேற்று (ஏப்., 17ல்) காலை 5.00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, 9.00 மணிக்கு மகாபூர்ணாஹூ, 9.45 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடந்தது.காலை 10.00 மணிக்கு கோபுர விமானங்களுக்கும், 10.30 மணிக்கு முக்குன்ற நாதர் உமையவள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மகா அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !