உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி செத்தவரை சொக்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

செஞ்சி செத்தவரை சொக்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

செஞ்சி:செத்தவரை மீனாட்சி உடனுறை சொக்கநாதர் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நாளை (ஏப்., 19ல்) நடக்கிறது.

செஞ்சி தாலுகா, செத்தவரை-நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள மீனாட்சி உடனுறை சொக்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை
பிரம்மோற்சவ பெருவிழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவையொட்டி, தினமும் சொக்கநாதர். மீனாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், சுவாமி கோவில் உலா நடைபெற்று வருகிறது. நாளை (19ம் தேதி) காலை 11.00 மணிக்கு, சிவஜோதி மோனசித்தர் தலைமையில், மீனாட்சியம்மன், சொக்கநாதர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !