குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிப்பாடு
ADDED :2530 days ago
குளித்தலை: குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட, சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
பவுர்ணமிக்கு முன்பு வரும் பிரதோஷத்தையொட்டி, குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில், நேற்று (ஏப்., 17ல்) மாலை சுவாமிக்கு சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. அதேபோல் நந்தீஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், பெரியபாலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், மேட்டுமருதூர் ஆரா அமுதீஸ்வரர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள சிவன் கோவில்களில், மாலையில் பிரதோஷ வழிபாடு நடந்தது. நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.