உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் பால்குட விழா

முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் பால்குட விழா

சென்னை: மயிலாப்பூர், முண்டகக்கன்னியம்மன் கோவில் சித்ரா பவுர்ணமியை விழாவை முன்னிட்டு 1008 பால்குடம் எடுத்து ஊர்வலம் நடைபெற்றது.

மயிலாப்பூரில் அமைந்துள்ள, முண்டகக்கண்ணி அம்மன் கோவில். 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில், மூலவர் அம்மன் சுயம்பாக தோன்றினார். சித்ரா பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, உலக நம்மைக்காகவும், கோடை வெப்பம் தணியவும், அம்மை நோய் தாக்காமல் காக்கவும், ஆண்டுதோறும் அம்மனுக்கு, 1,008 பால்குட அபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, பால் குட விழா, இன்று நடைபெற்றது. காலை, பக்தர்கள், 1,008 பால் குடங்களுடன், வீதிகளை ஊர்வலமாக வந்தனர்.  காலை, 11:30 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !